தமிழக அளவில் தேடப்பட்ட பிரபல கார் கொள்ளையன் திருச்சியில் கைது

தமிழக அளவில் போலீசாரால் தேடப்பட்ட பிரபல கார் கொள்ளையன் திருச்சியில் கைது செய்யப்பட்டான்.;

Update: 2022-03-16 16:11 GMT

கார் கொள்ளையன் ராஜா.

திருச்சி கீழசிந்தாமணி இந்திரா நகரில் இருசக்கர வாகனங்கள் பழது பார்க்கும் பட்டரை நடத்தி வரும் மேசிந்தாமணியை சேர்ந்த ராஜசேகர் (வயது 38 ) என்பவர் கடந்த 13-ந்தேதி இரவு தனது காரை பட்டறையில் நிறுத்தி விட்டு வீட்டுக்குச் சென்று விட்டு, மறுநாள் காலை வந்து பர்த்தபோது தனது கார் திருட்டு போனது சம்பந்தமாக கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார்  கொடுத்தார்.

இந்த புகாரின் அடையில் வழக்கு பதிவு செய்து கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் திருப்பூர் மாவட்டம் புதுநகர் ராஜா என்கிற சகாய ஆரோக்கிய தர்மராஜ் (வயது 57), நாகை மாவட்டம் சுரேஷ் (வயது 41) மற்றும் தஞ்சை மாவட்டம் பாண்டியன் (வயது 34) ஆகிய 3 பேரும் சேர்ந்து ராஜசேகரின் காரை திருடிச்சென்றது தெரிய வந்தது. மேலும் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் ஸ்ரீரங்கம், கோட்டை, அரசு மருத்துவமனை காவல் நிலைய பகுதிகளில் திருடப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள 7 இருசக்கர வாகனங்கள் கோட்டை காவல் நிலைய பகுதிகளில் திருட்டு போன 2 கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் 3 பேரையும் திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்த வழக்கில் கைதான ராஜா என்கிற சகாய ஆரோக்கிய தர்மராஜ் மீது கோவை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் 10 திருட்டு வழக்குகளும், அதே போல சுரேஷ் மற்றும் பாண்டியன் ஆகியோர் மீதும் பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் இருப்பதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

இந்த திருட்டு வழக்குகளில் துரிதமாக புலன்விசாரணை செய்து 2 கார்கள் மற்றும் 7 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்த கோட்டை போலீசாரை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் வெகுவாக பாராட்டினார். மேலும் திருச்சி மாநகர பகுதிகளில் இது போன்ற திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

Similar News