போலீசாரின் சீருடையில் சி.சி.டி.வி. கேமரா பொருத்த எஸ்.பி.யிடம் கோரிக்கை

போலீசாரின் சீருடையில் சி.சி.டி.வி. கேமரா பொருத்த திருச்சி மாவட்ட எஸ்.பி.யிடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

Update: 2023-10-31 16:34 GMT

எச்.எம்.கே.பி. அமைப்பின் மாநில செயலாளர் ராபர்ட் கிறிஸ்டி.

திருச்சி திருவெறும்பூர் போலீசாருக்கு சீருடையில் அணியும் சி.சி.டி.வி. கேமரா பொருத்த வேண்டும் என திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு எச். எம். கே. பி .மாநில செயலாளர் ராபர்ட் கிறிஸ்டி கோரிக்கை வைத்துள்ளார்.

இது குறித்து எச். எம். கே. பி. அமைப்பின் மாநில செயலாளர் ராபர்ட் கிறிஸ்டி திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமாரிடம்  கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

திருச்சி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவுகளின் கீழ் இருக்கும் கீழ்மட்ட காவலர்கள் முதல் எஸ். எஸ். ஐ. வரை தவறான செயல்களில் காவல்துறைக்கு களங்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் பல ஆண்டுகாலமாக காவல் பணியில் இருக்கும் சில காவலர்கள் தீய சக்திகளான, சமூக விரோதிகள் மற்றும் அரசியல் சமூக விரோதிகளுக்கு சிபாரிசு செய்யும் அரசியல் தலைவர்களுக்கும் தொடர்பு இருக்கிறது.

திருவெறும்பூர் காவல் நிலையத்திற்கு செல்லும் புகார்களில் லஞ்சம் பெற்றுக்கொண்டு அநீதிக்கு நீதியான தீர்ப்பையும் நீதியானவர்களுக்கு மிரட்டல்களும் விடுக்கப்படுவதாக புகார்கள் வருகின்றன. திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேர்மையின் சிகரம் என்று பெயர் பெற்று சிறப்புடன் செயல்படுகிறார். முக்கொம்பில் குற்றம் செய்த காவலர்களை சிறைக்கு அனுப்பிய பெருமைக்குரியவர் எஸ் பி வருண்குமார்.

சமீபத்தில் கோவை காவல்துறையில் காவலர்கள் பணியில் ஈடுபடும் போது உடையில் அணியும் சி.சி.டி.வி. கேமரா அறிமுகம் செய்யப்பட்டது. அதேபோல திருச்சி மாவட்டத்திலும் இந்த நடைமுறையை முதல் கட்டமாக திருச்சி திருவெறும்பூர் காவல் நிலையத்தில் உள்ள காவலர்களுக்கு வழங்க வேண்டும் .அப்போதுதான் காவல்துறையில் நீதியான செயல்கள் நடைபெறும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News