இருதரப்பினரிடையே மோதல்: 9 பேர் மீது வழக்கு

திருச்சி உறையூர் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது;

Update: 2021-11-26 04:30 GMT

திருச்சி உறையூர் பாக்குப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அசாருதீன் (வயது 25). இவருடைய உறவினர் சிராஜூதீன் (வயது 54). முதல் தளத்தில் அசாருதீனும், கீழ் தளத்தில் சிராஜூதீனும் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.

இரு குடும்பத்துக்கும் இடையே ஏற்கனவே சொத்து தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு கைகலப்பானது. அப்போது அசாருதீனை சிராஜூதீன், அவருடைய மனைவி அன்சல் சல்மா (வயது 44), மகன் முகமது ஆரீப் (வயது 19) மற்றும் 2 மகள்கள் சேர்ந்து உருட்டுக்கட்டை மற்றும் கைகளால் தாக்கியதாக கூறப்படுகிறது.

அதேபோல, அன்சல் சல்மாவை அசாருதீன், மல்லிகா பானு (வயது 42), நர்கீஸ் பானு (வயது 41), முத்துகிரபேகம் (வயது 45) ஆகியோர் கைகளால் தாக்கியதாக கூறப்படுகிறது.

இது குறித்து இருதரப்பினரும் கொடுத்த புகாரின்பேரில் உறையூர் போலீசார் இருதரப்பை சேர்ந்த 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News