திருச்சி 20-வது வார்டு வேட்பாளர் கே.சி. ஆறுமுகம் தீவிர வாக்கு சேகரிப்பு
திருச்சி மாநகராட்சி 20-வது வார்டு லோக் தந்திரிக் ஜனதா தளம் கட்சி வேட்பாளர் கே.சி. ஆறுமுகம் தீவிர வாக்கு சேகரித்தார்.;
திருச்சி மாநகராட்சி 20வது வார்டில் லோக் தந்திரிக் ஜனதா தளம் கட்சி சார்பில் கே.சி. ஆறுமுகம் வேட்பாளராக போட்டியிடுகிறார்.அவருக்கு முகம் பார்க்கும் கண்ணாடி சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
திருச்சி நகரின் கடை வீதியாகவும் வர்த்தக மையமாகவும் திகழும் பெரிய கடை வீதி பகுதியை சேர்ந்த இந்த வார்டில் கே.சி. ஆறுமுகம் ஏற்கனவே ஒரு முறை மாமன்ற உறுப்பினராக பதவி வகித்து சிறப்பாக மக்கள் பணியாற்றி உள்ளார்.
இதன் காரணமாக வார்டு முழுவதும் மக்களிடம் நன்றாக அறிமுகமாகி உள்ள இவர் தற்போது வீடு வீடாக வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார். அவருக்கு அப்பகுதி இளைஞர்கள் மிகுந்த ஆதரவு அளித்து வருகிறார்கள்.
செல்லும் தெருக்களில் எல்லாம் அவருக்கு மக்கள் வரவேற்பு அளித்து வருகிறார்கள்.