நிலுவை தொகையை தள்ளுபடி செய்ய கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் அரசுக்கு கோரிக்கை

நிலுவை தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும் என கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2021-12-01 15:00 GMT
கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் சங்க மாநில பொருளாளர் வெள்ளைச்சாமி திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

திருச்சியில் தமிழ்நாடு கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தின் மாநில பொருளாளர் வெள்ளைச்சாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக அரசால் உருவாக்கப்பட்ட அரசு கேபிள் டி.வி.யை ஜி.டி.பி. என்கிற கார்ப்பரேட் நிறுவனம் பல்வேறு மாவட்டங்களில் சட்ட ஒழுங்கு பிரச்சினைகளை ஏற்படுத்தி வருவதை தமிழக முதல்வர் தடுத்து நிறுத்த வேண்டும்.

அரசு கேபிள் டி.வி. கார்ப்பரேஷன் அனலாக் முறையில் ஓடிக் கொண்டிருந்த பொழுது நிலுவையில் இருந்த தொகையை மீண்டும் கட்டப்பட வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. அந்த நோட்டீஸில் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. தமிழக முதல்வர், கேபிள் ஆபரேட்டர்கள் தற்போது கொரோனா, மழை வெள்ளத்தினால் அரசு கேபிள் முறையாக வழங்கப்படவில்லை. இது போன்ற பாதிப்புகளை சந்தித்துள்ளனர். எனவே இந்த தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும்.

அகண்ட அலைவரிசை என்கிற இன்டர்நெட் கிராமந்தோறும் கொண்டு செல்வோம் என்ற திட்டத்தை உருவாக்கி இருக்கிறோம்.கடந்த ஆட்சியில் நிர்வாகம் சரியாக இல்லாததால் வட மாநிலங்களில் உள்ள கார்ப்பரேட் நிறுவனம் தமிழகத்தில் உள்ள அரசு கேபிள் டிவி இணைப்புகளை அபகரிக்க கூடிய வகையில் செயல்படுகிறது. செட்டாப் பாக்ஸ் ப்ளே இலவசமாக வழங்குகிறோம். சேனல் கட்டணத்தை இலவசம் என்றும் ஆபரேட்டர்களை ஏமாற்றி வருகின்றனர். இதில் தமிழக அரசு தலையிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News