திருச்சியில் சொத்து தகராறில் தம்பியை அடித்த அண்ணன் கைது
திருச்சியில் சொத்து தகராறில் தம்பியை அடித்த அண்ணனை கோட்டை போலீசார் கைது செய்தனர்.;
திருச்சி கோட்டை பகுதியில் உள்ள நீத்துக்காரத் தெருவை சேர்ந்தவர் நாகேந்திரன் மகன் முரளி (வயது 53). இவருடன் 4 பேர் அண்ணன், தம்பிகள் உள்ளனர்.
இவரது உடன் பிறந்த அண்ணன் ரவீந்திரன் (வயது 64) என்பவர் நேற்று முரளியிடம் அவர்களது சொத்தை தனது பெயரில் மாற்றி தரச் சொல்லி தகாத வார்த்தைகளால் திட்டி கைகளால் அடித்து கொலை மிரட்டல் விடுத்ததாக முரளி கோட்டை போலீசில் புகார் கொடுத்தார்.
இந்த புகாரின் பேரில் கோட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்கு பதிவு செய்து ரவீந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.