திருச்சியில் மாற்றுத்திறாளிகளின் உரிமைகள் குறித்த விளக்க கூட்டம்
திருச்சியில் மாற்றுத்திறாளிகளின் உரிமைகள் குறித்த விளக்க கூட்டம் நடைபெற்றது.;
திருச்சியில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான உரிமைகள் குறித்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பேசினார்.
திருச்சியில் இன்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் உரிமைகள் திட்டம் குறித்த மாவட்ட அளவிலான விளக்க கூட்டம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் செயலாளர் ஆனந்தகுார், மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் ஜெஸிந்தா லாசரஸ் ஆகியோர் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார் முன்னிலையில் இன்று (22.02.2023) நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு, உலக வங்கி நிதியுதவியுடன் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக தமிழ்நாடு உரிமைகள் திட்டம் என்ற முக்கிய திட்டத்தை தற்போது முன்னெடுத்துள்ளது. இதன் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வ ருகிறது. மாநிலம் முழுவதும் மாற்றுத்திறாளிகள் இதில் பயன் அடைந்து வருகிறார்கள்.
இத்திட்டமானது கடைகோடியில் உள்ள மாற்றுத்திறனாளிக்கும் சேவைகள் சென்றடையும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் படிப்படியாக செயல்படுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக திருச்சி, சென்னை, தருமபுரி, கடலூர் மற்றும் தென்காசி ஆகிய 5 மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விளக்ககூட்டமானது திருச்சி பெமினா ஓட்டலில் அரசுத்துறை சார்ந்த மாவட்ட அலுவலர்களுக்கும், அதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்காக தொண்டாற்றும் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும் தனித்தனியே நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் செயலாளர் ஆனந்தகுமார் தலைமையுரை வழங்கி தொடங்கி வைத்தார். பின்னர் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார் மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகள் குறித்த அறிக்கை, வழங்கப்படும் சேவைகள் மற்றும் தேவைகள் குறித்து உரையாற்றினார். மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.
அதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் ஜெஸிந்தா லாசரஸ் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் குறித்த விரிவான விளக்க உரையாற்றினார்.தொடர்ந்து அரசுத்துறை அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகளின் கூட்டமைப்பு மற்றும் தொண்டு நிறுவன பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி அவர்களுடைய கருத்துகள் பெறப்பட்டு, அதனுடைய தேவைகளையும் ஆராய்ந்து, அதற்குரிய முயற்சிகள் உரிமைகள் திட்டத்தின் மூலம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். முன்னதாக மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியின் இறுதியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் பல்நோக்கு மறுவாழ்வு உதவியாளர் ரமேஷ் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தலைமையில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் திருச்சி மாவட்ட திட்ட அலுவலர்கள் கீதா, கிரேஸி மற்றும் சார்லஸ் பிரின்ஸ் ஆகியோர் செய்திருந்தனர்.
இந்நிகழ்வில், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் செல்வம், இணை இயக்குனர் (மருத்துவப் பணிகள்) லெட்சுமி, மகாத்மா காந்தி மருத்துவனை முதல்வர் நேரு, மாவட்ட திட்ட அலுவலர் பொ.ரேணுகா, மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் செந்தில்குமார், தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், பல்வேறு மாற்றுத்திறனாளிகள் சங்கத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.