திருச்சியில் பெண்களுக்கான மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சியில் பெண்களுக்கான மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2022-08-04 12:05 GMT
திருச்சியில் இன்னர்வீல் கிளப் சார்பில் மார்பக புற்று நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

திருச்சி மலைக்கோட்டை இன்னர் வீல் சங்கத்தின் தலைவி  கவிதா நாகராஜன்  ஏற்பாட்டில், மாபெரும் மார்பக புற்று நோய் பரிசோதனை முகாம் திருச்சி தென்னூரில் உள்ள இந்து மிஷன் மருத்துவமனையில் நடைபெற்று வந்தது.


உலக சாதனை முயற்சியாக திட்டமிடப்பட்ட இந்த முகாம் ஆகஸ்ட் 1-ம் தேதியில் இருந்து தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெற்றது. நான்காவது நாளான இன்று மார்பக புற்று நோய் விழிப்புணர்வு பேரணியோடு நிறைவு பெற்றது.

இந்த முகாமில்100 பெண்களுக்கு மார்பக புற்று நோய் பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனைகள், தேவைப்படுவோருக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டன.


நிகழ்ச்சிக்கு இன்னர் வீல் சங்கங்களின் மாவட்ட தலைவர் சூரிய பிரபா ராஜசேகரன் தலைமை தாங்கினார். தங்கமயில் ஜுவல்லரியின் முதன்மை இயக்க அதிகாரி விஷ்வ நாராயணன், அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் நடிகருமான ஆர். ஏ. தாமஸ், போத்திஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் முத்துக்குமார், இந்து மிஷன் மருத்துவமனையின் நிர்வாகி சுப்பிரமணியம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ்-ல் இருந்து டிராகன் ஜெட்லி, உலக சாதனை நிகழ்ச்சியின் பார்வையாளராக கலந்து கொண்டார். திருச்சி மலைக்கோட்டை இன்னர் வீல் சங்கத்தின் தலைவி கவிதா நாகராஜன், செயலாளர் மீனா சுரேஷ், மண்டல ஒருங்கிணைப்பாளார்  ஆண்ட்ரூஸ் சேகர்,  உமா சந்தோஷ் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பு பணிகளை ரொட்டேரியன் வ. நாகராஜன் சேதுபதி செய்திருந்தார்.

Tags:    

Similar News