திருச்சி தில்லைநகரில் மருந்து கடை பூட்டை உடைத்து பணம் கொள்ளை

திருச்சியில் மெடிக்கல் பூட்டை உடைத்து பணம் கொள்ளை;

Update: 2022-01-09 14:22 GMT

திருச்சி தில்லைநகரில் உள்ள ஒரு தனியார் காம்ப்ளக்சில் வாசன் மெடிக்கல் கடை செயல்பட்டு வருகிறது. அதன் ஊழியர் நேற்று இரவு வழக்கம் போல கடையை மூடி பூட்டி விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல கடையை திறப்பதற்காக திரும்ப வந்து பார்த்தபோது கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து வாசன் மெடிக்கல்ஸ் மண்டல மேலாளர் விஜயரங்கன் தில்லை நகர் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் தில்லைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இதில் கடையில் முதல்நாள் விற்பனை செய்யப்பட்ட பணம் ரூ.50 ஆயிரம் இருந்தது கொள்ளை போனது தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்து கடையின் பூட்டை உடைத்து கொள்ளை அடித்த மர்ம நபர்களை போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. பதிவுகளை பார்வையிட்டு தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News