திருச்சி பெரிய கடைவீதியில் தர்கா பூட்டை உடைத்து உண்டியல் திருட்டு
திருச்சி பெரிய கடைவீிதியில் தர்காவின் பூட்டை உடைத்து உண்டியல் திருடிய கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.;
திருச்சி பெரியகடை வீதி பகுதியில் உள்ள சந்துகடையில் ஹஜ்ரத் ஹீசேன்ஷா பண்டாரிஷா தர்கா உள்ளது. இந்த தர்காவின் பூட்டை உடைத்து இன்று அதிகாலையில்உள்ளே சென்ற 3 மர்ம நபர்கள் அங்கிருந்த உண்டியலை திருடி சென்றுள்ளனர். இது குறித்து தர்காவின் நிர்வாகிகள் கோட்டை போலீசில் புகார் கொடுத்தனர்.
புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற கோட்டை குற்றப்பிரிவு போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதில் சந்தேகத்திற்கு இடமாக அந்த பகுதியில் நடமாடிய 3 நபர்கள் சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவாகி உள்ளனர். அந்த உருவத்தை வைத்து அவர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கோட்டை பகுதியில் இரவு நேரங்களில் சுற்றி வரும் சிறுவர்கள் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர். சிறுவர்கள் என்பதால் போலீசாரும் சற்று தயக்கத்துடனே நடவடிக்கை எடுக்க வேண்டி உள்ளது.