திருச்சி புத்தூர் பகுதியில் கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணம் திருட்டு
திருச்சி புத்தூர் பகுதியில் கோவில் பூட்டை உடைத்து மர்ம நபர்க் உண்டியல் பணத்தை திருடிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
திருச்சி புத்தூர் மந்தை பகுதியில் உள்ள கற்பக விநாயகர் கோவிலிலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சாமி தரிசனத்துக்கு அனுமதி இல்லை என்பதால் தினமும் பூஜைகள் மட்டும் நடத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில் வழக்கம்போல் பூஜைக்காக சென்றபோது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு அங்கிருந்த உண்டியலை உடைத்த மர்ம நபர்கள் அதிலிருந்த பணத்தையும் பொருட்களையும் திருடிச்சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து கற்பக விநாயகர் கோவிலை நிர்வகித்து வரும் சந்திரசேகர் என்பவர் உறையூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.