பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை

பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை;

Update: 2021-11-08 11:02 GMT

காந்திமார்க்கெட் காவல் நிலையம் (பைல் படம்).

திருச்சி வரகனேரி அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர்கள் ஜான்போஸ்கோ- ஆரோக்கியமேரி தம்பதியினர். இவர்களின் மகன் ஜார்ஜ்யூனிஸ்ராஜ் (வயது 17). 11-ஆம் வகுப்பு படித்து முடித்த நிலையில் இவர் படிக்கச் செல்லாமல் பெயிண்ட் அடிக்கும் வேலைக்கு சென்றுள்ளார். மேலும் தீபாவளி அன்று மது குடித்துள்ளார்.

இது குறித்து அவரது பெற்றோர்கள் திட்டவே மனமுடைந்த ஜார்ஜ் யூனிஸ் ராஜ் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து தகவலறிந்த காந்திமார்க்கெட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News