திருச்சியில் குப்பையில் கிடந்த பாட்டில் வெடித்து பெண் படுகாயம்

திருச்சி கேகேநகர் பகுதியில் குப்பையில் கிடந்த பாட்டில் வெடித்து பெண் படுகாயம் அடைந்தார்.;

Update: 2021-12-17 08:27 GMT

திருச்சி கே.கே. நகர். ரெங்கா நகர், 2-வது தெருவை சேர்ந்தவர் பெரியசாமி. இவருடைய மனைவி காளியம்மாள் (வயது 45). சம்பவத்தன்று காளியம்மாள் வீட்டின் அருகே கிடந்த குப்பைகளை சுத்தம் செய்து அதை தீயிட்டு கொளுத்தியுள்ளார். அப்போது குப்பையில் கிடந்த பாட்டில் ஒன்று எதிர்பாராத நேரத்தில் வெடித்து சிதறியதில் அவருடைய முகம் மற்றும் கை, கால் ஆகிய இடங்களில் படுகாயம் ஏற்பட்டது.

மேலும் தீக்காயமும் ஏற்பட்டது. இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் திருச்சி கே. கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News