ஆரம்ப சுகாதார நிலையங்களில் இன்று பூஸ்டர் தடுப்பூசி முகாம்

திருச்சி மாநகரில்18 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் இன்று பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடக்கிறது.;

Update: 2022-01-24 04:15 GMT

பைல் படம்.

திருச்சி மாநகரில் இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணி முதல் 18 இடங்களில் பூஸ்டர் தடுப்பூசி முகாமும், 36 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாமும் நடைபெறுகிறது. அதன்படி ஸ்ரீரங்கம், திருவானைக்கோவில், தெப்பக்குளம், இ.பி.ரோடு, பீரங்கிகுளம், இருதயபுரம், மேலகல்கண்டார்கோட்டை, சுப்பிரமணியபுரம், காமராஜ் நகர், எடமலைப்பட்டிபுதூர், பீமநகர், பெரிய மிளகு பாறை, தென்னூர், ராமலிங்கநகர், காந்திபுரம், உறையூர், காட்டூர், திருவெறும்பூர் ஆகிய நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

இதேபோல கும்பகோணம் சாலை, பூசாரிதெரு, வெனிஸ் தெரு, இ.பி.ரோடு காமராஜ் நகர், வரகனேரி மேட்டுத்தெரு, சுப்பிரமணியபுரம் டி.வி.கே.தெரு, 36-வது வார்டு ஸ்டார் நகர், கீழப்புதூர், கருமண்டபம் தெற்கு தெரு, வாமடம், பெரியமிளகு பாறை, புத்தூர் மந்தை, சோழராஜ புரம், காந்திபுரம், உறையூர் பஞ்சவர்ணசாமி கோவில் தெரு, காளையன் தெரு, ஜெகன்நாதபுரம், திருவெறும்பூர் மாரியம்மன் கோவில் தெரு ஆகிய இடங்களில் உள்ள அங்கன்வாடி மையங்கள், ஸ்ரீரங்கம் மாநகராட்சி கோட்ட அலுவலகம், ஸ்ரீரங்கம் ரெங்கா பள்ளி, திருவானைக்காவல் ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரி, தையல்கார தெரு, மதுரை ரோடு ஜீவா நகர், வரகனேரி ராமசாமி தேவர் மருந்தகம், சங்கிலியாண்டபுரம் மற்றும் பாரதிநகரில் உள்ள மாநகராட்சி நீர்த்தேக்க தொட்டி வளாகம், மேலகல்கண்டார் கோட்டை பஞ்சாயத்து பள்ளி, நாகம்மை வீதி நூலகம், மன்னார்புரம் செங்குளம் காலனி ஹவுசிங் போர்டு, 35-வது வார்டு ஆர்.எஸ்.புரம் பூங்கா, மிஷன்கோவில் வளாகம், கே.கே. நகர் ரெங்கா நகர், காஜாபேட்டை மாநகராட்சி பள்ளி, உய்யக்கொண்டான் திருமலை RC. பள்ளி, மலையப்ப நகர் மக்கள் மன்றம், திருவெறும்பூர் அம்மன் நகர் நலச்சங்கம் ஆகிய இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. மேலும் திருச்சி புறநகரில் 65 இடங்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. 

Tags:    

Similar News