திருச்சியில் தலைக்கவசம் அணிந்த வாகன ஓட்டிகளுக்கு புத்தகங்கள் பரிசு

திருச்சியில் தலைக்கவசம் அணிந்த வாகன ஓட்டிகளுக்கு போலீஸ் உதவி கமிஷனர் புத்தகங்களை பரிசாக வழங்கினார்.;

Update: 2022-01-12 08:55 GMT

திருச்சியில் தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்டி வந்தவர்களுக்கு போலீசார் புத்தகம் பரிசு வழங்கினர்.

திருச்சி மத்திய பஸ் நிலையம் பகுதியில் மலைக்கோட்டை நண்பர்கள் நற்பணி இயக்கம் சார்பில் விபத்தில்லா தமிழகம் காண விழிப்புணர்வு பிரச்சார தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கண்டோன்மெண்ட் உதவி போலீஸ் கமிஷனர் அஜய் தங்கம் கலந்துகொண்டு முககவசம் மற்றும் தலைக்கவசம் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு புத்தகத்தை பரிசாக வழங்கினார்.

மேலும் முகக்கவசம் அணியாதவர்களுக்கு முககவசங்கள் இலவசமாக அளித்தார். இளைஞர்களிடம் புத்தக வாசிப்பை மேம்படுத்துவதற்கும், பாதுகாப்பான பயணத்திற்கும் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்ட இந்நிகழ்ச்சிக்கு மலைக்கோட்டை நண்பர்கள் நற்பணி இயக்க தலைவர் உறந்தை பிச்சையா தலைமை தாங்கினார். முருகேசபாண்டியன், சோனா ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .

மேலும் ஜேம்ஸ் அமர்நாத், ராஜேந்திரன், அண்ணாதுரை ,ஜெயராஜ், பிரியதர்ஷினி, மோனிஷா, பாலு, யோகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News