மாணவர்களின் கற்பனை திறனை அதிகரிக்க செய்யும் புத்தகம் வாசிப்பு பழக்கம்
புத்தகம் வாசிப்பு பழக்கம் மாணவர்களின் கற்பனை திறனை அதிகரிக்க செய்யும் என்று பெல் ஓய்வு பெற்ற மூத்த அதிகாரி கூறினார்.
வாசிப்பு பழக்கம் மாணவர்களின் கற்பனை திறனை அதிகரிக்கும். புத்தக வாசிப்பின் அவசியத்தை சிறுவயதிலேயே பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு உணர்த்த வேண்டும் என்று ஓய்வு பெற்ற பெல் மூத்த அதிகாரி ராஜாமணி தெரிவித்தார்.
திருச்சி சுந்தர்ராஜ் நகர், ஹைவேஸ் காலனி மற்றும் காவேரி நகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் மாதாந்திர பத்திரிகை வாசிப்பு இயக்க கூட்டம் சுந்தர்ராஜ் நகர் மாநகராட்சி பூங்காவில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.
இந்த முகாமை பெல் ஓய்வு பெற்ற மூத்த அதிகாரி ராஜாமணி தொடங்கி வைத்து பேசினார். அப்போது ராஜாமணி கூறியதாவது:-
வாசிப்பு பழக்கம் மாணவர்களின் கற்பனை திறனை அதிகரிக்கும். புத்தகம் மனிதனை முழுமையாக்குகிறது. இளைஞர்கள் நல்ல புத்தகங்களை தேடி வாசிக்க வேண்டும். டாக்டர் ஞானவேல், மூத்த மருத்துவர் மற்றும் சமூக ஆர்வலர், புத்தகம் நம் மனதில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இறுதியில் இன்றைய செய்தித்தாள்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் வினாடி வினா நிகழ்ச்சி நடைபெற்றது. சரியாக பதில் கூறிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.