திருச்சியில் பத்திரங்கள் தட்டுப்பாடு: அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார்

திருச்சியில் பத்திரங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதிக விலைக்கு விற்கப்படுவதாக பொதுமக்கள் புகார் கூறி வருகிறார்கள்.;

Update: 2024-06-26 14:52 GMT

திருச்சி மாநகரில் பத்திரங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது கூடுதல் விலைக்கு விருப்பப்படுவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்/

திருச்சி மாநகரில் பல்வேறு பகுதிகளில் பத்திர விற்பனை நடைபெற்று வருகிறது. குறிப்பாக நீதிமன்ற வளாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் அதிக அளவில் பத்திர விற்பனையாளர்கள் உள்ளனர். இவர்களிடம் ஏராளமானவர்கள் வந்து பத்திரங்கள் வாங்கிச் செல்வார்கள். பத்திரப்பதிவு, நகல் பதிவு, வாடகை ஒப்பந்தம், கல்வி கடன் என பல்வேறு விதமான கடன்கள் பெறுவதற்கும் பத்திரங்கள் தேவைப்படுவதால் பொதுமக்கள் பத்திர விற்பனையாளர்களை நாடி வருகின்றனர்.

தற்போது ரூ. 20 மற்றும் ரூ. 100 மதிப்பிலான பத்திரங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அதனை சிலர் கூடுதல் விலைக்கு வருகின்றனர். 20 ரூபாய் பத்திரங்கள் ஐம்பதுக்கும் 100 ரூபாய் பத்திரங்கள் 150 க்கும் ஆயிரம் ரூபாய் பத்திரங்கள் 1200க்கும் 5 ஆயிரம் ரூபாய் பத்திரங்கள் ரூ. 5,200 க்கும் விற்கப்பட்டு வருகிறது. இதனால் அவதிப்படும் பொதுமக்கள் பத்திரப்பதிவிற்கு அதிகம் செலவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பத்திரங்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதை தடுக்க சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News