திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே பார்வையற்றோர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே மாவட்ட பார்வையற்றோர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2021-12-21 08:02 GMT

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே மாவட்ட பார்வையற்றோர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒருங்கிணைப்பாளர் நாகராஜன் தலைமை தாங்கினார்.

வெளியூர் செல்லும் அனைத்து பஸ்களிலும் அரசு ஆணைப்படி எண்ணிக்கை உச்சவரம்பின்றி அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்வதற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். பஸ்களில் பார்வையற்றோர், மாற்றுத்திறனாளிகள் தங்களது வியாபார பொருட்கள் எடுத்து செல்லும் சுமை பைகளுக்கு கட்டணத்திலிருந்து விலக்களிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பின்னர் டி.ஆர்.ஓ. பழனிகுமாரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.

Tags:    

Similar News