திருச்சியில் தடையை மீறி போராட்டம் நடத்திய பா.ஜ.க. வினர் 130 பேர் கைது

திருச்சியில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி போராட்டம் நடத்திய பா.ஜ.க. வினர் 130 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-11-29 10:15 GMT
திருச்சியில் தடையை மீறி பாரதீய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி மாநகர் மாவட்ட பா.ஜ.க. வர்த்தக பிரிவு, பட்டியலின அணி சார்பில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காத மாநில அரசை கண்டித்து திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று தடையை மீறி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு திருச்சி மாநகர் மாவட்ட பா.ஜ.க. தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்கினார்.

இந்த போராட்டத்தில் மாநில அரசை கண்டித்து பல்வேறு கோஷங்கள் எழுப்பினர். இதை தொடர்ந்து போலீசார் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதியை பேரிகாட் வைத்து அடைத்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் திடீரென தடையை மீறி கலெக்டர் அலுவலகத்துக்கு உள்ளே செல்ல முயன்றனர். அப்போது பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 20 பெண்கள் உள்ளிட்ட 130 பா.ஜ.க.வினரை பீமநகர் யானைகட்டி மைதானத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

Tags:    

Similar News