மலைக்கோட்டை நண்பர்கள் நற்பணி இயக்கம் சார்பில் பாரதியார் பிறந்த நாள் விழா

திருச்சியில் மலைக்கோட்டை நண்பர்கள் நற்பணி இயக்கம் சார்பில் பாரதியார் பிறந்த நாள் விழா நடைபெற்றது.

Update: 2021-12-28 06:24 GMT

விழாவில் மாணவர் ஒருவருக்கு திருச்சி மாநகராட்சி நகர பொறியாளர் அமுதவல்லி பரிசு வழங்கினார்.

திருச்சியில் மலைக்கோட்டை நண்பர்கள் நற்பணி இயக்கம் சார்பில் மகாகவி பாரதியார் விழா நடைபெற்றது. விழாவையொட்டி நடத்தப்பட்ட  கவிதை, கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.விழாவிற்கு தென்னக ரயில்வே முன்னாள் பண்டக மேலாளர்  டி.எஸ். கணேஷ் தலைமை தாங்கினார். எஸ்.எஸ். ஜூலியன், கே. ரவிக்குமார் முன்னிலை வகித்தனர்.  ருக்மணி ஸ்ரீ கிருஷ்ணா இறைவணக்கம் பாடினார். இயக்க தலைவர்  மு. பிச்சையா அனைவரையும் வரவேற்றார்.

இந்த விழாவில் திருச்சி மாநகராட்சி நகர பொறியாளர் அமுதவல்லி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கும், பாரதியார் வேடம் அணிந்து வந்த சிறுவனுக்கும் ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாரதியாரின் கவிதைகளையும் மேற்கோள் காட்டி பேசினார்.

மகாகவி பாரதியார் விருது ருக்மணி ஸ்ரீகிருஷ்ணா, லால்குடி முருகானந்தம் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. கவிஞர் கோவிந்தசாமி, கப்பல் கி. கிருஷ்ணமூர்த்தி, ஆசிரியர் இராச இளங்கோவன், நெடுமாறன், மாரிமுத்து, வல்ல நாடான் இல. கணேசன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

பொன்மலைப்பட்டி புனித  வளனார் மேல்நிலைப்பள்ளி, கருமண்டபம் ஆரோக்கியமாதா மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றிற்கு  கேடயம் வழங்கப்பட்டது. சிவராமலிங்கம், ஜேம்ஸ், ரவிசங்கர், பாலமுருகன், முருகேசன் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் அவர்களது  பெற்றோர் கலந்து கொண்டனர். முடிவில் இயக்க செயலாளர் கலைமாமணி  ஆர். எம். தீனதயாளு நன்றி  கூறினார்.

Tags:    

Similar News