பியூட்டி பார்லர் பெண் உரிமையாளர் தற்கொலை

திருச்சியில், பியூட்டி பார்லர் பெண் உரிமையாளர் தனக்கு ஆதரவு இல்லை என்ற விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-12-18 05:00 GMT

திருச்சி பொன்மலைப்பட்டி சாந்தி தெருவை சேர்ந்தவர் ஷேம்லா மேரி (வயது 44). பியூட்டி பார்லர் நடத்தி வந்த இவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

இவரது மகனும், மகளும் ஷேம்லா மேரியை பிரிந்து காட்டூரில் உள்ள பாட்டி வீட்டில் வசித்து வருகின்றனர். தனக்கு யாரும் ஆதரவு இல்லாததால் மனமுடைந்த அவர் நேற்று வீட்டில் மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்த பொன்மலை போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags:    

Similar News