திருச்சியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற 4 பேர் கைது
திருச்சியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி மாநகரில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி டிக்கெட்டுகள் ஆன்லைன் எண்கள் மூலம் விற்கப்படுவதாக ஏராளமான புகார்கள் வந்துள்ளன.
இதனை தொடர்ந்து லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபடுவோரை மாநகர போலீசார் கைது செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் இன்று லாட்டரி சீ்ட்டு விற்றதாக மதுரை ரோட்டை சேர்ந்த அப்துல் ரசாக் (வயது 47), பாலக்கரையை சேர்ந்த குணசேகரன் (வயது 51), ஆட்டுக்காரத் தெருவை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் (வயது 24) வரகனேரியைச் சேர்ந்த ஹரிஹரசுதன் (வயது 37) ஆகியோரை காந்தி மார்க்கெட், பாலக்கரை, கோட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.