திருச்சியில் போலீஸ் தடையை மீறிய அய்யாக்கண்ணு உள்பட 460 பேர் மீது வழக்கு
திருச்சியில் போலீசார் தடையை மீறி போராட்டம் நடத்திய அய்யாக்கண்ணு உள்பட 460 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.;
பெட்ரோல், டீசல் விலையை குறைக்ககோரி நேற்று முன்தினம் பாரதீய ஜனதா கட்சியின் ஓ.பி.சி அணியினர் திருச்சி மேலப்புதூர் -- சாலையில் மனித சங்கிலி போராட்டம் நடத்தினர். போலீஸ் தடையை மீறி போராட்டம் நடத்தியதாக பாரதீய ஜனதா கட்சியினர் 200 பேர் மீது கண்டோன்மெண்ட் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதே போல விவசாய விளை பொருட்களுக்கு 2 மடங்கு லாபம் கேட்டு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அவர்களில் 160 பேர் மீது உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதே போல திருச்சி மத்திய சிறை முன்பு போராட்டம் நடத்திய முஸ்லிம் அமைப்பினர் 100 பேர் மீது கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.