திருச்சி ரெங்காநகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சி ரெங்காநகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் டெங்கு கொசு ஒழிப்புவிழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2023-10-24 11:51 GMT

திருச்சி ரெங்கா நகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் டெங்குகொசு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருச்சி உய்யகொண்டான் திருமலை ரெங்கா நகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

திருச்சி மாநகராட்சி வார்டு எண் 25 ல்அமைந்துள்ளது ரெங்கா நகர். இங்கு 350 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மத்திய ,மாநில அரசு அதிகாரிகள், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை நடத்துவோர், நடுத்தர மக்கள் என இங்கு வசித்து வருகிறார்கள்.

தற்போது மழைக்காலம் ஆரம்பித்து விட்டதால் டெங்கு, மலேரியா மற்றும் பல நோய்கள் வருவதற்கு வாய்ப்பு இருப்பதால் இந்த நல சங்கம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது .இதன் ஒரு பகுதியாக நல சங்கத்தின் புதிய நிர்வாகிகள்  தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் முதல் நிகழ்ச்சியாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

டெங்கு, பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் தூய்மை பணி பற்றிய விழிப்புணர்வினை நகர் மக்களிடையே ஏற்படுத்த திருச்சி மாநகராட்சியுடன், ரெங்கா நகர் குடியிருப்போர் நல சங்கமும் மற்றும் வாசன் வேலி நடை பயிற்சியாளர்கள் மன்றமும் இணைந்து மாபெரும் டெங்கு கொசு மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.


இந்த நிகழ்ச்சிக்கு 25வது வார்டு மாமன்ற உறுப்பினர் கே எஸ் நாகராஜன் முன்னிலை வகித்தார். மாநகராட்சி மண்டல குழு உதவி ஆணையர் சதீஷ்குமார் இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதில் 50-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு நகரின் இரு புறங்களில் உள்ள குப்பைகள், முள் செடிகள், பிளாஸ்டிக் பைகள் போன்றவற்றை அப்புறப்படுத்தி சாலைகளை சுத்தப்படுத்தினார்கள்.

ரெங்கா நகர் குடியிருப்போர் நல சங்கத்தின் தலைவர் அழகன், செயலாளர் தமிழரசன், பொருளாளர் முத்துகிருஷ்ணமூர்த்தி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பொதுமக்கள் தூய்மை பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். வாசன் வேலி நடை பயிற்சியாளர்கள் சங்கத்தின் சார்பாக அதன் தலைவர் சண்முகம், செயலாளர் சுந்தர் மற்றும் நடைபயிற்சியாளர்களும் இதில் கலந்து கொண்டு தூய்மை பணி செய்தனர்.

எஸ் ஆர் வேதா மற்றும் சாகாஸ் போன்ற தனியார் தொண்டு நிறுவனங்களும் கலந்து கொண்டு குப்பைகளை உரமாக்குவதால் ஏற்படும் நன்மை மற்றும் பழைய துணிகளை துணி பைகளாக  மாற்றுவதால் ஏற்படும் நன்மை போன்றவற்றை எடுத்துக் கூறி இதன் மூலம் பிளாஸ்டிக் தவிர்ப்போம் குப்பை இல்லா நகரை படைப்போம் என உறுதி எடுத்துக் கொண்டார்கள்.

இதே போனறு மாதம் ஒருமுறை மாநகராட்சியுடன் இணைந்து தூய்மைப் பணிகள் செய்ய திட்டமிட்டுள்ளதாக ரெங்கா நகர் குடியிருப்போர் நல சங்க செயலாளர் தமிழரசன் தெரிவித்தார்.

Tags:    

Similar News