திருச்சியில் மரம் வளர்த்தல் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சியில் மரம் வளர்த்தல் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2022-05-16 05:36 GMT

திருச்சியில் மரம் வளர்த்தல் மாநாடு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் வருகிற21- 22 - மே -2022  ம்தேதி மரம்-மழை-மகிழ்ச்சி என்ற பெயரில் மாநில அளவிலான மாநாடு மற்றும் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.

மரம் வளர்க்கும் அனைவரையும் ஒற்றுமைப்படுத்தி, உறுதியான இயக்கமாக மாற்ற மர ஆர்வலர்களின் மரம் - மழை - மகிழ்ச்சி மாநில மாநாடு பற்றிய ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இதில் மரம் P. தாமஸ், விதைகள் S. யோகநாதன் ,தண்ணீர் கே.சி. நீலமேகம்,தண்ணீர் அமைப்பு செயலாளர் சதீஸ்குமார், கிருஷ்ணாலயா ராஜூ, தண்ணீர் அமைப்பு நிர்வாகக் குழு ஆர்.கே.ராஜா, தெய்வகுமார், பொன்மலை பாலகிருஷ்ணன், முசிறி நாகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

Tags:    

Similar News