திருச்சியில் சாலைப்பாதுகாப்பு வார விழாவையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சியில் சாலைப்பாதுகாப்பு வார விழாவையொட்டி நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.;

Update: 2023-01-12 13:37 GMT

திருச்சியில் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் நடந்த சாலை பாதுகாப்பு வாரவிழா விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வாகன ஓட்டிகளிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

திருச்சியில் நெடுஞ்சாலை துறை சார்பில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு நிகழ்ச்சியில் துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 11ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை ஒரு வார காலம் சாலை பாதுகாப்பு வார விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி கோட்ட தேசிய நெடுஞ்சாலை திட்டம் சார்பில் இன்று சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்பட்டது. இதனையொட்டி திருச்சி சுப்ரமணியபுரம் மற்றும் மன்னார்புரம் பகுதிகளில் இன்று சாலை பாதுகாப்பு வார விழாவின் துவக்க விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

திருச்சி தேசிய நெடுஞ்சாலை கோட்டத்தின் சார்பில் நடைபெற்ற இவ்விழாவிற்கு தேசிய நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் சேது தலைமை தாங்கினார்.அப்போது அந்த வழியாக சாலைகளில் சென்றவர்களிடம் சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது. மேலும் வாகனங்களில் பின்புறம் சிவப்பு வண்ண ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்டினார்கள். இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது.

மிதமான வேகத்தில் செல்ல வேண்டும் வேகத்தை விட பாதுகாப்பை முக்கியம் என்பதையும் அறிவுரையாக வழங்கி வாகன ஓட்டுனர்களுக்கு அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இந்த விழாவில் திருச்சி தேசிய நெடுஞ்சாலை கோட்டத்தைச் சேர்ந்த ரவிக்குமார் உள்ளிட்ட உதவி கோட்ட பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அந்த துண்டு பிரசுரங்களில் தலைக்கவசம் உயிர்க்கவசம், வாகனம் ஓட்டும் போது அலைபேசி பேசாதீர்கள், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டாதீர், மிதவேகம் மிக நன்று, சீட்டு பெல்ட் அணியாமல் கார் ஓட்டாதீர், பாலம் மற்றும் வளைவில் முந்தாதீர், சாலை விதிகளை பின்பற்று, சிக்னல் விளக்குகளை மதித்து நடப்பீர், பத்து மீட்டர் இடைவெளி விட்டு வாகனங்களை ஓட்டவும், கூடுதலாக பாரமோ அல்லது ஆட்களோ ஏற்றிச் செல்ல வேண்டாம்,வாகனத்தின் பின்புறம் சிவப்பு விளக்கு மற்றும் ஒளிரும் ஸ்டிக்கர் கட்டாயம் ஒட்ட வேண்டும். ஓட்டுநர்கள் அடிக்கடி கண் பரிசோதனை செய்வது அவசியம் என்பது போன்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தது.

Tags:    

Similar News