திருச்சி பள்ளியில் தூய்மை பணி பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி

Awareness Program - திருச்சி தென்னூர் சுப்பையா நடுநிலைப்பள்ளியில் தூய்மை பணி பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update: 2022-07-20 07:31 GMT

திருச்சியில் உள்ள ஒரு பள்ளியில் என் குப்பை என் பொறுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Awareness Program - திருச்சி தென்னூர் சுப்பையா நடுநிலைப்பள்ளியிவ் திருச்சி புத்தூர் கிளை நூலக வாசகர் வட்டம், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பில் என் குப்பை..என் பொறுப்பு.. விழிப்புணர்வு நிகழ்ச்சிபள்ளி வளாகத்தில் நடைபெற்றது.பள்ளி தலைமை ஆசிரியர் ஜீவானந்தன் தலைமை வகித்தார்.கிளை நூலகர் புகழேந்தி முன்னிலை வகித்தார்.

புத்தூர் கிளை நூலக வாசகர் வட்ட தலைவர் விஜயகுமார் பேசுகையில்,

தூய்மை பாரதம் எனும் நோக்கில் இந்தியா முழுவதும் திடக்கழிவு மேலாண்மை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்த விழிப்புணர்வுகள் ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

திருச்சி மாநகராட்சியில் நாள்தோறும் பல லட்சம் டன் குப்பைகள் கையாளப்படுகிறது. பொது மக்களுக்கு குப்பைகளை தரம் பிரித்து மாநகராட்சி ஊழியரிடம் அளிக்க கூறி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

என் குப்பை..என் பொறுப்பு எனும் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்கள் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பைகளை தரம் பிரித்தல் குறித்த செயல்முறையினை விளக்கினார்.

என் குப்பை என் பொறுப்பு எனும் வாசகத்தை முழுமையாக செயல்படுத்துவேன் என பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உட்பட அனைவரும் உறுதிமொழியேற்றனர். நிறைவாக ஆசிரியை சகாயராணி நன்றி கூறினார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News