பொன்மலையில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி

பொன்மலையில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி மக்கள் சக்தி இயக்கம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

Update: 2024-04-16 13:40 GMT

திருச்சி பொன்மலையில் விளையாட்டு வீரர்கள் நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சி.

மக்கள் சக்தி இயக்கம் சார்பில் பொன்மலை கோல்டன் தடகள சங்க பயிற்சி மாணவ, மாணவிகள் பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோடை கால பயிற்சி மாணவ, மாணவியர்கள் 100% VOTE வடிவில் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்கள்.

தமிழகம் முழுவதும் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் ஏப் 19ம்  தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் நூறு சதவீத வாக்குப்பதிவினை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பொன்மலை கோல்டன் தடகள சங்க மாணவ, மாணவியர்கள் 100% VOTE வடிவில் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும், மாணவர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய பாதகைகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இளம் வாக்காளர்களான மாணவ மாணவிகளிடம் தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் எதிர்கால வாக்காளர்களான மாணவ, மாணவியர்கள் 100 சதவீதம் நேர்மையாக வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாணவர்களிடையே எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலின் போது 100 சதவீதம் வாக்களிப்பதை விளக்கும் வகையில் 100% VOTE வடிவில் மாணவ, மாணவியர்களை நிறுத்தி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

நிகழ்வில் மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம், பொன்மலை கோல்டன் தடகள சங்க கனகராஜ், தண்ணீர் அமைப்பு செயலாளர் கி.சதிஸ்குமார் கோல்டன் தடகள பயிற்சியாளர்கள் , மாணவ, மாணவிகள் மக்கள் சக்தி இயக்க நிர்வாகிகள் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்.

Tags:    

Similar News