திருச்சியில் தாய் நேசம் அறக்கட்டளை சார்பில் சிறந்த ஆசிரியர்களுக்கு விருது
திருச்சியில் நடந்த விழாவில் தாய் நேசம் அறக்கட்டளை சார்பில் சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
திருச்சியில் தாய் நேசம் அறக்கட்டளை சார்பில் சிறந்த ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்தியா உலகளவில் வல்லரசாக வருவதற்கு இன்றைய இளைய தலைமுறையினரால் தான் முடியும் என்று நம்பிக்கையுடன் கூறியவர் மறைந்த நமது நாட்டின் சிறந்த விஞ்ஞானியும் குடியரசு தலைவருமான டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம். அவரது சொல்லை மெய்ப்பிக்கும் வகையில் தற்போது பல சாதனைகளை நமது நாடு செய்து வருகிறது.
அப்படிப்பட்ட இளைஞர்கள் உருவாக மிக முக்கிய பங்கு வகிப்பவர்கள் நல்ல ஆசிரியர்கள். அப்படிபட்ட ஆசிரியர்களை இன்றைய இளைய தலைமுறையினர் மரியாதையுடன் நடத்த வேண்டும். தவறு செய்யும் மாணவர்களை ஆசிரியர் கண்டிக்கிறார் என்றால் அந்த மாணவர்களின் எதிர்காலம் வீணாகி விட கூடாது என்கிற நல்ல எண்ணத்தில் தான் என்பதை மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்களும் உணர வேண்டும். அப்படி உணர்ந்து தவறை திருத்தி கொள்ளும் பட்சத்தில் அவர்கள் சாதனை மாணவர்களாக உருவாகின்றனர்.
அப்படிப்பட்ட சாதனையாளர்களை உருவாக்கும் ஆசிரியர்களுக்கு பாராட்டு மற்றும் வாழ்த்துக்கள் தெரிவிக்கும் நிகழ்வு திருச்சி மாவட்டத்தில் பல்வேறு சமூக நல பணிகளை செய்து வரும் தாய் நேசம் அறக்கட்டளை சார்பில் சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஸ்ருதி அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக அனைத்து மக்கள் சக்தி இயக்கத்தின் தலைவர் டாக்டர் தலைமகன் எஸ். வெங்கடேசன், திருச்சி மாவட்ட மகளிர் திட்ட பொறுப்பாளர் வி. ஆனந்தி, தேசிய விருது பெற்ற குறும்படத்தின் நடிகரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான ஆர்.ஏ.தாமஸ், நோவுட் வேஸ்ட் நிர்வாகி மோகன் ஏகாம்பரம், திருச்சி மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை மாநகர துணை அமைப்பாளர் லயன் ரெங்கராஜன், சமூக ஆர்வலர் சேவை ரத்னா ஏ. ஆர்மஸ்டார்ங் ராபி உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளுக்கு சிறந்த ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கினர்.
முன்னதாக நிகழ்ச்சி தமிழ்தாய் வாழ்த்து பாடலுடன் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சி தொடங்கப்பட்டது .அதனை தொடர்ந்து வரவேற்புரை விருந்தினர் உரை மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடனம் ஆசிரியர்களுக்கான விருது வழங்குதல் மற்றும் இறுதியில் நன்றியுரை மற்றும் தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி சிறப்பாக நிறைவுபெற்றது.
இந்நிகழ்வில் புதிய பாதை அறக்கட்டளை நிர்வாகி தீபலட்சுமி, டாக்டர் அம்பேத்கர் நற்பணி இயக்கத்தின் நிர்வாகி பக்கிரிசாமி மற்றும் திரளான சமூக ஆர்வலர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகச்சிக்கான ஏற்பாடுகளை தாய் நேசம் அறக்கட்டளையின் அறங்காவலர் மற்றும் நிறுவனர் முனைவர் ஹெப்சி சத்திய ராக்கினி தலைமையில், செயலாளர் பிரேமா ஒருங்கிணைப்பாளர் கீதா ரேகா, ஆலோசகர் பிரேமலதா, அட்மின் மகேஷ்வரி சாந்தி, அறங்காவலர்கள் ஜெசிந்தா பிரியா, மகேஷ்வரி குமாரி, போவாஸ் ,செல்வராஜ், அபிஷா ஜனனி லட்சுமி, ஆனந்தவள்ளி, கயல்விழி உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.