விருது பெற்ற சிறந்த குறும்பட இயக்குனருக்கு திருச்சியில் பாராட்டு விழா
விருது பெற்ற சிறந்த குறும்பட இயக்குனருக்கு திருச்சியில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.;
திருச்சியில் சிறந்த குறும்பட இயக்குனர் விருது பெற்ற அர சுருட்டு குறும்பட இயக்குனர் விஜய் பார்த்திபனுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும் தெரிவிக்கும் நிகழ்வு ஈகில் புரொடக்சன் ஹவுஸ் நிறுவனம் சார்பில் நடைபெற்றது.
சி.பிரகாஷ் மற்றும் பி. பத்மபிரகாஷ் தயாரிப்பில் குறும்பட இயக்குனர் விஜய் பார்த்திபன் இயக்கத்தில் உருவாகியுள்ள சைக்கோ திரில்லர் குறும்படம் அரசுருட்டு. இப்படம் பல்வேறு குறும்பட போட்டிகளில் கலந்து கொள்ள தேர்வாகியுள்ளது.கடந்த மே 1 தொழிலாளர் தினத்தில் உத்ரா அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அர சுருட்டு குறும்படத்தை இயக்கிய இயக்குனர் விஜய பார்த்திபனுக்கு சிறந்த இயக்குனர் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
திருச்சியில் நடைபெற்ற நிகழ்வில் இயக்குனர் விஜய் பார்த்திபன் உதவி இயக்குனர் சரன் சாமுவேலுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் தாய் வீடு எஸ்.எம்.சிவகுமார் மாற்றம் அமைப்பு மற்றும் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் துணை தலைவருமான என்ஜினீயர் செந்தில்குமார், Stv தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் எஸ். பாலசுப்ரமணியன், பெர்னாட் ஆனந்த், அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் நடிகருமான ஆர்.ஏ.தாமஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அர சுருட்டு குறும்படம் வித்தியாசமான மாறுபட்ட கதை களம் கொண்ட சைக்கோ திரில்லர் படமாகும். இதில் மாறுபட்ட தோற்றத்தில் நடிகர் ஆர். ஏ. தாமஸ் நடித்துள்ளார். விரைவில் இப்படத்தை வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.