மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாரால் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ஏலம்
திருச்சி மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாரால் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் 20ம் தேதி ஏலம் விடப்படுகிறது.
திருச்சி மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாரால் பல்வேறு வழக்குகளில் இருசக்கர வாகனங்கள் 51 மற்றும் ஒரு நான்கு சக்கர வாகனம் ஆகியவை ஏலம் விடப்பட உள்ளன. திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் வருகிற 20ம் தேதி காலை 10.30 மணிக்கு திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், மற்றும் அரசு தானியங்கி மண்டல துணை இயக்குனர் ஆகியோர் முன்னிலையில் இந்த ஏலம் நடைபெறும்.
ஏலம் எடுக்க விரும்புவோர் இருசக்கர வாகனங்களுக்கு ரூ.2ஆயிரம், நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ.10 ஆயிரம் வைப்பு தொகை செலுத்த வேண்டும். இந்த தகவலை மாட்ட காவல் ஆணையர் சுஜீத்குமார் தெரிவித்துள்ளார்.