வழிப்பறி, கொலை முயற்சியில் ஈடுபட்ட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருச்சியில் வழிப்பறி கொலை முயற்சியில் ஈடுபட்ட 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.;

Update: 2022-01-12 04:09 GMT

ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் கடந்த நவம்பர் மாதம் 11-ந்தேதி மணிகண்டன் என்பவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்ய முயன்ற வழக்கில் ரங்கநாதன் (22) என்பவரை ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்தனர். இது போல் திருச்சி மேலகல்கண் டார்கோட்டை மஞ்சத்திடல் கம்பிகேட் டாஸ்மாக் கடை அருகில் கடந்த மாதம் 20-ந்தேதி மோட்டார் சைக்கிளில் சென்ற நபரிடம் பணம் மற்றும் செல்போனை பறித்துச் சென்றதாக ரெனீசை பொன்மலை போலீசார் கைது செய்தனர்.

கடந்த மாதம் 30-ந்தேதி பொன்மலை எல்லை காளி யம்மன் கோவில் அருகில் மோட்டார்சைக்கிளில் சென்றவரிடம் பணத்தை பறித்ததாக முருகானந்தம் (27) என்பவரை பொன்மலை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், ரெனிஸ், ரெங்கநாதன், முருகானந்தம் ஆகிய 3 பேரும் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர்கள் என்று விசாரணையில் தெரிய வந்ததால், அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய சம்பந்தப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், மாநகர போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தனர்.

அதன்பேரில், 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் ஜி.கார்த்திகேயன் உத்தரவிட்டார். அதற்கான ஆணை திருச்சி மத்திய சிறையில் உள்ள 3 பேருக்கும் வழங்கப் பட்டது.

Tags:    

Similar News