திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தவர்கள் மீது தாக்குதல்

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Update: 2021-11-20 08:00 GMT

பைல் படம்.

திருச்சி லால்குடி ஊட்டத்துார் மேலதெருவை சேர்ந்தவர் சாமிகண்ணு (வயது 38). இவர் மாரியம்மன் காலனியில் உள்ள பொதுப்பாதை பிரச்சினை தீர்ப்பது தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த 19 பேருடன் திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசுவிடம் மனு அளித்துள்ளனர்.

மனு அளித்து விட்டு கலெக்டர் அலுவலகத்திலிருந்து வெளியே வந்த அவர்கள், கலெக்டர் ஆபீஸ் ரோடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது காரில் வந்த சிலர் அவர்களை வழி மறித்துள்ளனர். காரிலிருந்து இறங்கிய அவர்கள், மனுவா கொடுக்குறீர்கள் என்று கேட்டுக்கொண்டே சரமாரியாக தாக்கி உள்ளனர்.

இது குறித்து திருச்சி செசன்ஸ் கோர்ட் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அவர்களை தாக்கியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News