பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற தடகள வீரருக்கு திருச்சியில் வரவேற்பு
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற தடகள வீரருக்கு திருச்சியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.;
இந்திய நாட்டின் சார்பில் 2024 பாரிஸ் ஒலிம்பிக் தடகள சாம்பியன்ஷிப் தொடர் ஓட்டத்தில் பங்குபெற்று திருச்சி திரும்பிய தடகள வீரரும் ரயில் பயணச்சீட்டு பரிசோதகருமான ராஜேஷ் ரமேஷுக்கு திருச்சி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
2024 ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிசில் நடைபெற்றது இதில் இந்தியா சார்பில் தடகள சாம்பியன்ஷிப் தொடர் ஓட்டத்தில் திருச்சி ரயில்வே கோட்ட பயணச்சீட்டு பரிசோதகர் ராஜேஷ் ரமேஷ் கலந்து கொண்டார். போட்டிகள் முடிவடைந்த நிலையில் திருச்சிக்கு வருகை புரிந்த அவருக்கு ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே கோட்டத்தில் பணிபுரியும் இந்தியன் ரயில்வே டிக்கெட் செக்கிங் தொழிலாளர்கள் நல சங்கத்தின் நிர்வாகிகள் தடகள விளையாட்டு வீரர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் மலர் மாலை அணிவித்து பொன்னாடை அணிவித்து உற்சாக வரவேற்பளித்தனர் இராஜேஷ் ரமேஷ் அவர்கள் 400 மீட்டர் ஒட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற இந்திய தடகள விளையாட்டு வீரர் ஆவார் கடந்த 2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலப்பு 4 × 400 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் 4×400 மீட்டர் ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்றார். இவர் அதே நிகழ்வில் 2023 உலக தடகள வாகையர் போட்டியிலும் பங்கேற்றார், ஹீட்ஸில் 2:59.05 என்ற ஆசிய சாதனையைப் படைத்த பின்னர் இறுதிப் போட்டிக்கு வந்தார் இறுதியில் அந்த அணி இறுதிப் போட்டியில் 6-வது இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது 2024 பாரிசில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் பங்கேற்று தடம் பதித்தார். தடம் பதித்த தடகள வீரர் ராஜேஷ் ரமேஷை அகில இந்திய பிற்படுத்தப்பட்ட ரயில்வே தொழிலாளர் சங்க இணைத்தலைவர் சகாய விஜய் ஆனந்த், இந்திய ரயில்வே பயணச்சீட்டு பரிசோதகர் அசோசியேஷன் தலைவர் கார்த்திக், திருச்சி ஆர்ச்சரி அசோசியேஷன் செயலர் இளங்கோ, துணை பயிற்சியாளர் ஸ்ரீராம், ஆறுமுகம், திருச்சி மாவட்ட டேக்வாண்டோ அசோசியேஷன் செய்லர் கணேசன், தேசிய பயிற்சியாளர் பாலசுப்பிரமணியம், ஜான், மேத்யூ, சைக்கிளிஸ்ட் ராஜேஷ்,சர்வதேச மற்றும் தேசிய தடகள விளையாட்டு வீரர்களும் ரயில்வே ஊழியர்களுமான தமிழரசன் சரவணன், மணிகண்டன், ஆறுமுகம், பாலகிருஷ்ணன், அசாருதீன் திருச்சி கோட்ட ரயில்வே டிக்கெட் பரிசோதகர்கள், மோகன்ராஜ், சரவணன் ரவி சுரேஷ், ரஞ்சனி, மோகன்ராஜ், சாந்தி, ஜெனிதா, ஜெயலட்சுமி, ரவி, இளம் வயது உலக வில்வித்தை சாதனையாளர் ஆராதனா மல்லர் கம்பம் சாதனையாளர்ஆத்வித் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் குடிமக்கள் நலச் சங்க தலைவர் கோவிந்தராஜ், மாற்றம் அமைப்பின் தலைவரும் தேசிய விருது பெற்ற குறும்பட நடிகரும் இயக்குனருமான ஆர்.ஏ.தாமஸ், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் மற்றும் ரயில்வே ஊழியர்கள் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.