ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரர் வீராங்கனைகள் வெற்றி பெற கையெழுத்து இயக்கம்
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வீரர் வீராங்கனைகள் வெற்றி பெற கையெழுத்து இயக்கம் திருச்சியில் நடத்தப்பட்டது.
திருச்சி சுந்தரராஜ் நகர், ஹைவேஸ் காலனி, காவேரி நகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பாக தற்பொழுது பாரிசில் நடைபெறும் 33வது ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டுள்ள இந்திய விளையாட்டு வீரர், வீராங்கனைகள் வெற்றி வாகை சூட கையெழுத்து இயக்கம் ஞாயிற்றுக்கிழமை மாலை சுந்தரராஜ் நகர் மாநகராட்சி பூங்காவில் நடைபெற்றது.
ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர் மற்றும் பெற்றோர் கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்டு இந்திய வீரர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
திரவிய கிளாடினா உடற்கல்வி இயக்குனர், ஹோலி கிராஸ் கல்லூரி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
அவர் பேசும் பொழுது கடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியா நிகழ்த்திய சாதனைகளை எடுத்து கூறினார். ஒலிம்பிக் போட்டிகளும் இந்தியா வீரர் மற்றும் வீராங்கனைகள் சிறப்பாக திறமையை வெளிப்படுத்தும் அதிக பதக்கங்களை வென்று நாட்டிற்கு சிறப்பை சேர்ப்பார்கள்.
பள்ளி கல்லூரி மாணவ மாணவியர் தினசரி உடற்பயிற்சி செய்து தங்கள் உடல் நலத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று எடுத்துரைத்தார்.
சத்தான உணவு வகைகள் பற்றியும் விரிவாக கிளாடினா எடுத்துரைத்தார். பங்கு பெற்றோர்களின் சந்தைகளும் சந்தேகங்களுக்கும் விடையளித்தார்.
இந்த கூட்டத்தில் தொல்காப்பியன், தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, விராலிமலை, பாலசுப்ரமணியன், மூத்த ஹோமியோபதி மருந்துவர்,சத்திய வாகீஸ்வரன், ஓய்வு பெற்ற துணை ஆட்சியர், ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஹோலி கிராஸ் கல்லூரி தேசிய ஹாக்கி வீராங்கணைகள் ஜெய்ஷா மற்றும் லக்ஷயா , தேசிய டேக்வுண்டோ வீராங்கனை ரம்யா ஆகியோர் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப் பட்டனர்.