அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலை: பாஜக, இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம்
அரியலூர் மாணவி லாவண்யா தற்கொலை சம்பவத்திற்கு நீதி கேட்டு திருச்சியில் பாஜக, இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர் மாணவி லாவண்யா மதமாற்ற முயற்சியால் தற்கொலை செய்து கொண்டதாகவும், லாவண்யாவுக்கு நீதி கேட்டும், தற்கொலைக்குத் தூண்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், இதுபோன்ற சம்பவங்கள் மேலும் நடக்காமல் இருப்பதற்காக மதமாற்றத் தடைச்சட்டம் அமல்படுத்த கோரியும் திருச்சி காந்தி மார்க்கெட் அருகே பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு மதமாற்ற தடை சட்டத்தை அமல்படுத்த வேண்டி கோஷம் எழுப்பினார்கள். லாவண்யா மரணத்திற்கு நீதியும் வேண்டியும் கோஷம் எழுப்பப்பட்டது.