திருச்சி மாவட்டத்தில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்
திருச்சி மாவட்டத்தில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
திருச்சி மாவட்டத்தின் பல பகுதிகளில் நாளை வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்வினியோகம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பின்படி திருச்சி மாவட்டம் வாளாடி துணை மின் நிலையத்திற் ட்பட்ட கீழப் பெருங்காவூர், வேலாயுதபுரம், தண்டாங்கோரை, வாளாடி, பி வளவனூர், தர்மநாதபுரம், முத்துராஜபுரம், மேல பெருங்காவூர், சிறு மருதூர், மேலவாளாடி, புதுக்குடி, எசனகோரை, அப்பாதுரை, கீழ மாரியம்மன் தெரு, அகலங்கநல்லூர், திருமங்கலம் ,மாந்துறை, நெய் குப்பை, ஆர்.வளவனூர், பல்லபுரம், புதூர் உத்தமனூர், வேளாண் கல்லூரி,ஆங்கரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9:45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது என்று லால்குடி மின்வாரிய செயற்பொறியாளர் அன்பு செல்வன் தெரிவித்துள்ளார்.
இதுபோல் திருச்சி மாவட்டம் அளுந்தூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதையொட்டி அளுந்தூர், சேதுராப்பட்டி, பாத்திமா நகர், சூறாவளிப்பட்டி, குஜிலியம்பட்டி, கொட்டப்பட்டு, குமரப்பட்டி, கலிமங்கலம், குன்னத்தூர், கிடாரம் பட்டி சூரக்குடிப்பட்டி ,அம்மன் ஸ்டீல், இ. மேட்டுப்பட்டி, மேல பச்சைகுடி, அரசு பொறியியல் கல்லூரி,ஐஐஐடி,பள்ளப்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9:45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும் என்று திருச்சி கிழக்கு மின்வாரிய செயற்பொறியாளர் முத்துராமன் தெரிவித்துள்ளார்.