திருச்சி என்.ஐ.டி.ஆண்டு விழாவில் மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்

திருச்சி என்.ஐ.டி.ஆண்டு விழாவில் மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் மெடல் வழங்கப்பட்டது.;

Update: 2023-04-28 17:07 GMT

திருச்சி என்.ஐ.டி. ஆண்டு விழாவில் சென்னை இன்டெக்ரல் கோச் தொழிற்சாலையின் ஓய்வுபெற்ற பொது மேலாளர் சுடான்சு மணி பங்கேற்றார்.

மாணவர்கள் பொருளாதார மந்த நிலையினால் கனவுகளை அழிக்காமல் சூழ்நிலைக்கு ஏற்ப முயற்சி செய்தால் வெற்றி பெற முடியும் என திருவெறும்பூர் அருகே உள்ள என். ஐ. டி. ஐ. கல்லூரி ஆண்டு விழாவில் சென்னை இன்டெக்ரல் கோச் தொழிற்சாலையின் ஓய்வுபெற்ற பொது மேலாளர் சுடான்சு மணி கூறினார்.

என். ஐ.டி. கல்லூரி ஆண்டு விழாவிற்கு என். ஐ. டி.இயக்குனர் அகிலா தலைமை வகித்து கடந்த ஆண்டில் என்.ஐ.டி. கல்லூரி மாணவர்கள் மற்றும் கல்லூரியின் சாதனைகள் குறித்து விளக்கி கூறினார்.

சென்னை இன்டெக்ரல் கோச் தொழிற்சாலையின் ஓய்வுபெற்ற பொது மேலாளர் சுடான்சு மணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களையும் மெடல்களையும் வழங்கி பேசியதாவது:-

அப்துல் கலாம் சொன்னது போல் தூங்கிக்கொண்டு கனவு காணாமல் விழித்துக் கொண்டு கனவு காணுங்கள்.அப்போது தான் புதிய தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சத்தை அடைய முடியும். மேக் இன் இந்தியா திட்டத்தினால் வெளிநாட்டில் இருந்து நாம் தயாரித்து பெற்ற பல பொருட்களை தற்பொழுது இந்தியாவிலேயே தயாரித்து வருகிறோம். மாணவர்களிடம் நேர்கொண்ட பார்வை, தலைமை பண்பு, நிர்வாகம் மிகவும் முக்கியமாக இருக்க வேண்டும் .

ஆங்கிலேயர் காலத்திற்கு பிறகு ரயிலில் மாடல் வடிவம் தற்பொழுதுதான் வந்தே பாரத் ரயிலுக்காக மாற்றப்பட்டுள்ளது.உலக மக்கள் தொகையில் சீனா முதலிடத்தில் இருந்தால் ஐ சி எப்பில் அது இந்தியாவை விட பின்னுக்கு உள்ளது.

வந்தே பாரத் ரயில் உருவாக்குவதற்கு எங்களுக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. இதனால் தான் எங்களால் சாதிக்க முடிந்தது. கூட்டு முயற்சி  இருந்தால்தான் வெற்றி பெற முடியும்,பொருளாதார மந்த நிலையினால் மாணவர்கள் தங்களது கனவுகளை அழிக்காதீர்கள். சூழ்நிலைக்கு ஏற்ப முயற்சி செய்யுங்கள். வெற்றி அடைய முடியும் முதல் முதலில் வந்தே பாரத் ரயில் டெல்லியில் தொடங்கப்பட்டதாகவும் கூறினார்.

முன்னதாக டீன் (கல்வி). டாக்டர் ராமகல்யாண் அய்யாகரி கல்லூரி ஆண்டறிக்கை வாசித்தார். இந்த விழாவில் கல்லூரி மாணவ மாணவிகள் பேராசிரியர்கள் உட்பட ஏராளமானவர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News