மாநில அளவிலான விளையாட்டுகளில் சாதனை படைத்த மாணவிகளுக்கு பாராட்டு விழா
மாநில அளவிலான விளையாட்டுகளில் சாதனை படைத்த மாணவிகளுக்கு திருச்சியில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.;
மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்த மாணவிக்கு திருச்சியில் பாராட்டு விழா நடத்தி சான்றிதழ் வழங்கப்பட்டது.
திருச்சியில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் கெளரவ தலைவரும், முன்னாள் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியுமான நீதியரசர் எம்.கற்பகவிநாயகம் வழிகாட்டுதலின்படி திருச்சி கண்டோன்மென்டில் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்த மாணவிகளுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
சமீபத்தில் அரியலூர் மாவட்டத்தில் தமிழக அரசின் பள்ளி கல்வி துறை சார்பில் மாவட்டங்களுக்கு இடையே விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் சிலம்ப விளையாட்டு போட்டியில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 12 ம் வகுப்பு படிக்கும் சிலம்ப விளையாட்டு பள்ளி மாணவி சி. ரேகா பரமேஸ்வரி 19 வயதிற்கு உட்பட்ட பிரிவில் சிலம்பம் சுற்றி மாநில அளவில் 2ம் இடம் பெற்று திருச்சி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். அவருக்கும் அவருக்கு பயிற்சியளித்த சிலம்ப பயிற்சியாளர் பார்த்திபனுக்கும்
திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஸ்டேட் ஓபன் 13 வயதிற்கு உட்பட்ட ஜூனியர் பிரிவில் மாநில அளவிலான பூப்பந்தாட்ட போட்டியில் 2ம் இடமும் தஞ்சையில் நடைபெற்ற 11 வயதினருக்கு உட்பட்ட போட்டியில் முதல் இடமும் பெற்ற 6 ம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவி கர்ஸனா ராஜேஷுக்கும் பாராட்டு சான்று நினைவு பரிசு மற்றும் வாழ்த்துக்கள் தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் நிர்வாகிகளான அமைப்பின் கெளரவ தலைவரும் சட்ட ஆலோசகருமான வழக்கறிஞர் எஸ். அண்ணாதுரை, பொதுச்செயலாளரும் திருச்சி மாவட்ட தலைவருமான என்ஜினீயர் செந்தில்குமார், சமூக ஆர்வலர் தாய் வீடு சிவகுமார், வழக்கறிஞர்கள் ஜெ. கிருஷ்ணமூர்த்தி, ஆறுமுகம், இளையராஜா, அமைப்பின் மகளிர் பிரிவு செயலாளர் வழக்கறிஞர் கார்த்திகா உள்ளிட்டோர் கலந்து கொண்டு விளையாட்டு வீரர்களுக்கு பொன்னாடை அணிவித்து பாராட்டு சான்று மற்றும் நினைவு பரிசை வழங்கி மேலும் பல சாதனைகள் புரிய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மேலும் இந்நிகழ்வில் சமூக செயற்பாட்டாளர்கள் ஆனந்தி செளந்திரம் சிபு, நிவரஞ்சனி கோபித்தா, பாவனா சாம்பவி, சின்னதம்பி,பிரபு ஹேமா மற்றும் அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியும் நடிகருமான ஆர். ஏ. தாமஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர். இந்நிகழ்வு அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின் திருச்சி மாவட்ட தலைவர் என்ஜினீயர்செந்தில்குமாரது அலுவலகத்தில் நடைபெற்றது.