கத்தியை காட்டி வழிப்பறி செய்தவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
திருச்சியில் கத்தியை காட்டி வழிப்பறி செய்தவர் மீது கமிஷனர் உத்தரவுபடி குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக ஜி.கார்த்திகேயன் பொறுப்பேற்றது முதல் மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றச்சம்பவங்கள் ஏதும் நடைபெறாவண்ணம் முன்னெச்சரிக்கையாக தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், தீவீர வாகன தணிக்கை செய்து குற்றவாளிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள காவல் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு அறிவுரைகள் வழங்கி வருகிறார்.
இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் தில்லைநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தென்லூர் ஹை ரோட்டில் ஒருவரிடம் கத்தியை காட்டி ரூ.1000/- பறித்து சென்றதாக நில்லைநகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வெந்தகை பாலா என்கிற பாலமுருகன் (வயது 37), என்பவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் போலீசாரின் விசாரணையில் வெந்தகை பாலா (எ) பாலமுருகன் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 5 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
எனவே, மேற்படி வெந்தகை பாலா (எ) பாலமுருகன் தொடர்ந்து குற்றம் செய்யும் எண்ணம் உள்ளவர் என விசாரணையில் தெரிய வந்ததால், தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு தில்லைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்து திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், மேற்படி நபரை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டுள்ளார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் இருக்கும் பாலமுருகனுக்கு குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கமிஷனர் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.