திருச்சியில் 2 ரவுடிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
திருச்சியில் 2 ரவுடிகள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.;
திருச்சி காஜா பேட்டை பசுமடம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப் (வயது 52). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ,தான் வசிக்கும் தெருவில் இட்லி வாங்குவதற்கு சென்ற சிறுமியிடம் பாலியல் பலாத்காரம் செய்தார். இதனைத் தொடர்ந்து கோட்டை அனைத்து மகளிர் போலீசார் அவரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
அதேபோல திருச்சி அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த சாகுல் மீரான் (34)என்பவர் ஒரு பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்து விட்டு ஓடினார். அவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவர்கள் இருவரும் சிறையில் இருந்து வெளியே வந்தால் மீண்டும் குற்ற செயலில் ஈடுபடுவார்கள் என்பதால் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஒரு வருடம் விசாரணையின்றி சிறையில் அடைக்க திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவரிடமும் நேற்று வழங்கப்பட்டது.