திருச்சி கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு வினாடி வினா நிகழ்ச்சி

திருச்சி கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு வினாடி வினா நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2023-08-09 15:32 GMT

திருச்சியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு வினாடி வினா நிகழ்ச்சி நடைபெற்றது.

திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்கம் திருச்சிராப்பள்ளி புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி போதை ஒழிப்பு இளையோர் மன்றம் இணைந்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு வினாடி வினா நிகழ்ச்சியினை கல்லூரி வளாகத்தில் நடத்தியது.புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி முதல்வர் முனைவர் அருட் சகோதரி ராஜகுமாரி தலைமை வகித்தார்.

திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்க தலைவர் முகமது சபி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ராக்போர்ட் நரம்பியல் மைய மூளை நரம்பியல் நிபுணர் மருத்துவர் வேணி,ஆத்மா மனநல மருத்துவமனை மனநல ஆலோசகர் கரன் லூயிஸ்,அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற போதை ஒழிப்பு இளையோர் மன்றத்தினரிடம் போதை ஒழிப்பில் நமது பங்கு, தனி மனித ஒழுக்கம், உடல், உள ஆரோக்கியம், நேர்மறை மனப்பான்மையை வளர்த்தல். பாராட்டும் உணர்வினை வளர்த்தல், சமூகப் பண்புகளை (Social Values) வளர்த்தல், கற்கும் ஆர்வத்தினை வளர்த்தல் குறித்து வினாடி வினா நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

வினாடி வினா நிகழ்ச்சியில் பங்கேற்ற இளங்கலை முதலாம் ஆண்டு மாணவிகள் புவனேஸ்வரி, ஆயிஷா, கிருத்திகா, தாரணி, தீபா, அக்ஷயா, நான்சி, மெலினா, ஆஷிபா, பவித்ரா, புவனேஸ்வரி, பெனட் உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர் வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி முதல்வர் முனைவர் அருட் சகோதரி ராஜகுமாரி திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்க தலைவர் முகமது சபி உள்ளிட்டோர் கல்வி உபகரணங்களை பரிசுகளாக வழங்கினார்கள்.

கல்லூரி போதை ஒழிப்பு இளையோர் மன்ற ஒருங்கிணைப்பாளர்கள் எடல் ஜோஸ்பின் ராஜகுமாரி, முனைவர் ரேவதி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஹேமலதா, மாணவர் மன்ற துணைத்தலைவர் ரோஷினி, முன்னாள் தலைவர் லட்சுமி பிரியா, திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்க முடக்குனர் உமர் முக்தர், இயக்குனர்கள் குமார், பாஸ்கரன், இணைச்செயலாளர் சந்துரு, தலைமைப் பண்பு ஒருங்கிணைப்பாளர் சரவணன், சங்க சேவை திட்ட ஒருங்கிணைப்பாளர் கணேசன், உறுப்பினர் வளர்ச்சி குழு தலைவர் கார்த்தி, சீனிவாசன் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

முன்னதாக புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி போதை எதிர்ப்பு இளையோர் மன்ற தலைவர் பிருந்தா லட்சுமி வரவேற்க நிறைவாக செயலர் பெனட் நன்றி கூறினார்.

Tags:    

Similar News