திருச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
திருச்சி மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.;
திருச்சி பிராட்டியூரில் திருச்சி மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்குள் இன்று மாலை 6 மணி அளவில் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் டி.எஸ்.பி. மணிகண்டன் தலைமையில் அதிரடியாக நுழைந்தனர்.
கதவு, ஜன்னல்களை மூட உத்தரவிட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் ஊழியர்கள் யாரையும் வெளியே செல்லவோ, வெளியில் இருந்து உள்ளே வரவோ அனுமதிக்கவில்லை.
அதிகாரிகளின் ஒவ்வொரு மேஜை மற்றும் டிராயர்களிலும், பீரோக்களிலும் போலீசார் சோததனை நடத்தினர். இந்த சோதனையின்போது கணக்கில் வராத பணம் ரூ.60 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம் எப்படி வந்தது? என்பது பற்றி போலீசார் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர்.