திருச்சி தெற்கு மாவட்ட அ.தி.மு.க.வினர் அண்ணா படத்திற்கு மாலை அணிவிப்பு

திருச்சி தெற்கு மாவட்ட அ.தி.மு.க.வினர் அண்ணா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.;

Update: 2022-02-03 15:32 GMT

அண்ணா உருவ படத்திற்கு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் குமார் மாலை அணிவித்தார்.

மறைந்த முதல்வர் அண்ணாவின் 53.வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க.  சார்பில், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் அண்ணா திருவுருவ படத்திற்கு, திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப.குமார்  மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர் ராவணன், மாவட்ட துணை செயலாளர் சாந்தி, மாவட்ட மீனவரணி செயலாளர் பொன்னுசாமி, இலக்கிய அணி செயலாளர் முருகன், ஐ.டி.விங் செயலாளர் சுரேஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News