திருச்சி எடமலைப்பட்டி புதூரில் கால்நடைகளால் போக்குவரத்து பாதிப்பு
திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் கால்நடைகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.;
திருச்சி எடமலைபட்டிபுதூர், கிராப்பட்டி பகுதியில் ஏராளமான மாடுகள் சாலையில் சுற்றி வருகின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன் மாடுகள் சாலையில் நின்றுகொண்டு ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டுக்கொள்வதினால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். பெரும் அளவில் விபத்து ஏற்படும் முன்பு மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கேட்டு கொண்டுள்ளனர்..