விலங்கு - மனித மோதலுக்கு தீர்வு காண திருச்சியில் 24-ல் கருத்தரங்கம்

திருச்சியில் வன விலங்குகள் - மனித மோதலுக்கு தீர்வு காண்பதற்கான கருத்தரங்கம் 24-ம் தேதி நடைபெற உள்ளது.

Update: 2021-12-21 07:43 GMT

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் (பைல் படம்)

திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களை உள்ளடக்கியது திருச்சி வன மண்டலம். இதில் வன விலங்குகளால் ஏற்படும் மனிதன், வன உயிரின இடையூறுகள், மோதல்களை தீர்க்க கலந்துரையாடல் கூட்டம் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. வரும் 24-ஆம்தேதி காலை 10 மணிக்கு இந்த கூட்டம் தொடங்கும். வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமை வகிக்க உள்ளார்.

கலெக்டர்கள், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாய சங்கத் தலைவர்கள், மாவட்ட வனக்குழு தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த கூட்டத்தில் மக்களின் குறைகளை மனுக்களாகவும், நேரடியாகவும் தெரிவிக்கலாம். வனத்துறை அமைச்சர், வனத்துறை உயர் அலுவலர்கள், சில முக்கிய துறை அதிகாரிகளுடன் கலந்து பேசி குறைகளை நிவர்த்தி செய்யப்படும். இத்தகவலை திருச்சி கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News