திருச்சியில் அங்கன்வாடி ஊழியர்கள் சிலிண்டருடன் வந்து ஆர்ப்பாட்டம்
திருச்சியில் அங்கன்வாடி ஊழியர்கள் சிலிண்டருடன் வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.;
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் முன் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் மல்லிகா பேகம் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் கலைச்செல்வன் முன்னிலை வகித்தார்.
சிலிண்டருக்கான முழு தொகையை வழங்க வேண்டும் இல்லை என்றால் வருடத்திற்கு நான்கு சிலிண்டரை அரசு ஏற்று வழங்க வேண்டும், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு முன்பு உள்ளூர் இடம் மாறுதல் மற்றும் மாவட்ட இடம் மாறுதல் உடனடியாக வழங்க வேண்டும், மூன்று வருடம் பணி முடித்த மினி அங்கன்வாடி ஊழியர்களுக்கு எந்தவித நிபந்தனையும் இன்றி பதவி உயர்வு வழங்க வேண்டும், செல்போன் கொடுத்து நான்கு ஆண்டுகள் முடிவடைந்து பழுது அடைந்த நிலையில் புதிய செல்போன் உடனடியாக வழங்க வேண்டும், ஏற்கனவே மினி மையத்தில் இருந்து பிரதான மையத்திற்கு பதவி உயர்வில் சென்ற ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும், காலி பணியிடங்களை 1993 பணியில் சேர்ந்தவர்களுக்கான பதவி உயர்வு வழங்க வேண்டும். அல்லது மேற்பார்வையாளர் நிலை ஒன்றுக்கான ஊதியம் வழங்க வேண்டும். 10 வருடம் பணி முடித்த அங்கன்வாடி ஊழியர்களுக்கு பதவி உயர்வு அல்லது மேற்பார்வையாளர் நிலை இரண்டுக்கான ஊதியம் வழங்க வேண்டும். திட்ட பணி தவிர பிற துறை பணிகளை திணிப்பதை கைவிட வேண்டும் .15 குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் மையத்தை ஒன்றோடு ஒன்று இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். உணவின் செலவுகளை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சத்துணவு ஊழியர்கள் சிலிண்டர்களை கொண்டு வந்து இருந்தனர். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயலாளர் சித்ரா பேசினார் .மற்றும் அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளும் பேசினார்கள்.