மலைக்கோட்டை கோவில் தேரோட்டத்தையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம்

மலைக்கோட்டை கோவில் தேரோட்டத்தையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் காங்கிரஸ் கட்சி சார்பில் வழங்கப்பட்டது.;

Update: 2022-05-13 12:04 GMT

காங்கிரஸ் கட்சி சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயில் தாயுமான சுவாமிகளின் சித்திரைத் தேரோட்டம் இன்று(13-05-22) நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட துணைத்தலைவர் மலைக்கோட்டை முரளி தலைமையில் வார்டு தலைவர் வெங்கடேஸ்வரன் முன்னிலையில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் எம். சரவணன் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் வீரேஸ்வரம் சங்கர், வாட்டர் வாசு, நிர்மல் குமார், சம்சுதீன் சந்து கடை தியாகராஜன்,  வெல்லமண்டி பாலசுப்ரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News