திருச்சியில் அ.தி.மு.க. சார்பில் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் விழா
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.;
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
இதனையொட்டி நடந்த விழாவிற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் மு. பரஞ்ஜோதி தலைமை தாங்கினார். ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் புவனகிரிசட்டமன்ற உறுப்பினரும் கடலூர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமானஅருள்மொழித்தேவன் எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சர் வளர்மதி, மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணை செயலாளர் செல்வராஜ், மாவட்ட பொருளாளர் சேவியர், பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார், ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார், நடராஜன், முத்துக்கருப்பன், செல்வராஜ், அழகேசன், பகுதி கழக செயலாளர்கள் டைமன் திருப்பதி, சுந்தர்ராஜன், பேரூராட்சி செயலாளர் சிறுகமணி செந்தில் மற்றும் மாவட்ட அணி செயலாளர்கள் புல்லட் ஜான், கண்ணதாசன், பாஸ்கர், விவேக், அன்னை கோபால் மற்றும் வட்ட கழக செயலாளர்கள், கிளைக் கழகச் செயலாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.