ஜெயக்குமார் கைது கண்டித்து திருச்சியில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது கண்டித்து திருச்சியில் அ.தி.மு.க. வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும்,முன்னாள் சபாநாயகருமான ஜெயக்குமாரை கைது செய்ததை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அதன் ஒரு பகுதியாக திருச்சி ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் சிந்தாமணியில் பகுதியில் உள்ள அண்ணாசிலை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன்,திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்சோதி, திருச்சி புறநகர்தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் ஆகியோர் தலைமை தாங்கினர்.
இதில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் முன்னாள் எம் பி. டி ரத்தினவேல், முன்னாள் அமைச்சர்கள்,கு.ப.கிருஷ்ணன்,வளர்மதி, சிவபதி,பூனாட்சி மற்றும் முன்னாள் எம்.எல்.ஏக்கள்,மாநில நிர்வாகிகள்,மாவட்ட அணி நிர்வாகிகள்,பகுதி கழக செயலாளர்கள்,ஒன்றிய கழக செயலாளர்கள்,நகர கழக செயலாளர்கள்,வட்ட கழக செயலாளர்கள்மற்றும் மாநில,மாவட்ட,பகுதி,ஒன்றிய,நகரம்,வட்டம்,பேருராட்சி,ஊராட்சிகழக நிர்வாகிகள்,பொறுப்பாளர்கள்,னைத்து அணி நிர்வாகிகள்,உள்ளாட்சி அமைப்புநிர்வாகிகள்,மகளிர் அணி நிர்வாகிகள்,தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள்,தொண்டர்கள்,பொது மக்கள்உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்தஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்தும், ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.